வில்லியாக சோனியா அகர்வால்

திருமணம், விவாகரத்துக்குப் பிறகு படங்களில் நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்த சோனியா அகர்வால், தற்சமயம் ‘வில்லி’யாக மிரட்ட ஆரம்பித்திருக்கிறார். ஜெயகிருஷ்ணா இயக்குகிற படம் ‘உன்னால் என்னால்’.

ஜெகா, சஹானா, ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடிக்கிற இந்தப் படத்தில் சோனியா அகர்வால் வில்லியாக வலம் வருகிறார்.

‘பணம் என்பது இன்றைய வாழ்வுக்கு அத்தியாவசியமானது. ஆனால், தேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்லை.. ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் என்று பணத்தைச் சேர்க்க நினைத்தால் குறுக்கு வழிக்குத் தான் போக வேண்டும்.

மிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ். அவருக்கு செக்ரட்டியாக இருக்கும் சோனியா அகர்வால், ராஜேஷை கொலை செய்து விட்டு அந்த சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க திட்டமிடுகிறார், அந்த வலையில் வந்து சிக்குகிறார்கள் ஜெகா, உமேஷ் ஜெயகிருஷ்ணா மூவரும்.

இவர்களை வைத்து ராஜேஷை கொலை செய்ய சோனியா போட்ட சதி திட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பது தான் கதை.’’ என்கிறார் இயக்குநர் ஜெயகிருஷ்ணா.

அமைதியான கடலுக்குள் தானே ஆக்ரோஷமான புயலும், பூகம்பமும் ஒளிந்திருக்கிறது. அது மாதிரி சோனியா அகர்வால் படம் முழுக்க அமைதியான தோற்றத்தில், வில்லியாக மிரட்டியிருக்கிறாராம்.

Sharing is caring!