விளம்பர இடையூறு இன்றி ஆண்டுக்கு 100 படங்களை ஒளிபரப்பும் டாடா நிறுவனம்

விளம்பர இடையூறு இன்றி ஆண்டுக்கு 100 படங்களை ஒளிபரப்ப டாடா ஸ்கை நிறுவனம் முன் வந்திருக்கிறது. விஜய் டி.வியுடன் இணைந்து இந்த திட்டத்தை டாடா ஸ்கை நிறுவனம் செயல்படுத்த இருக்கிறது. ஏற்கெனவே மராத்தி, தெலுங்கு, பஞ்சாபி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த திட்டத்தை டாடாஸ்கை நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. தற்போது டாடாஸ்கை தமிழ் சினிமா என்ற பெயரில் தமிழில் செயல்படுத்த இருக்கிறது.

குடும்ப டிராமா, ஆக்சன், காமெடி, பேண்டசி, என பல வகையான படங்களை கலந்து ஒளிபரப்ப இருக்கிறார்கள். வாரத்திற்கு இரண்டு படங்கள் என்ற வகையில் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் ஒரு பிரிமியர் படம் இருக்கும். பாகுபலி, தீரன் அதிகாரம் ஒன்று, துப்பாக்கி, விஸ்வரூபம் உள்ளிட்ட படங்கள் பிரிமியர் வரிசையில் திரையிடப்பட இருக்கிறது. இந்த மாதம் பிரிமியர் படமாக விஜய் ஆண்டனி நடித்த காளி ஒளிபரப்பாகிறது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி நடந்தது. டாடா ஸ்கை அதிகாரி அருண் உன்னி, டி.வி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி கலந்து கொண்டனர்.

Sharing is caring!