விழா மேடையில் உடலில் தீயுடன் அக்சய் குமார்… செல்ல மிரட்டல் விடுத்த மனைவி

மும்பை:
உடம்பில் தீ வைத்துக் கொண்டு விழா மேடைக்கு வந்த அக்சய் குமாருக்கு செல்ல மிரட்டல் விடுத்துள்ளார் அவரது மனைவி.

தி எண்டு என்ற இணையதள தொடரில் நடிக்கவுள்ளார் அக்சய் குமார். இதன் அறிமுக விழாவில் கலந்துகொண்டவர் உடம்பில் நெருப்பை பற்றவைத்து எரிந்த படி நடந்துகொண்டிருந்தார்.

இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாவதை கண்ட அவரின் மனைவி டுவிங்கிள் கண்ணா, ‘நீங்கள் திடீரென தீ வைத்து கொண்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. வீட்டுக்கு வாங்க, உங்களை கொலை செய்கிறேன் என்று செல்லமாக மிரட்டியுள்ளார். அவரது இந்த ட்வீட் தற்போது வைரலாகியுள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!