விழிப்புணர்வுக் குறும் படத்தில் சிவகார்த்திகேயன்

சீமராஜா படத்தை அடுத்து ராஜேஷ்.எம் மற்றும் ரவிக்குமாமார் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில், மோதி விளையாடு பாப்பா என்ற பெயரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்திருக்கிறார்.
ஐந்து நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்தை இயக்குநர் திரு இயக்க, ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராகினி மகேந்திரன் தயாரித்துள்ளார். விரைவில் இது வெளியாக உள்ளது.

பாதுகாப்பான நகரமான சென்னையிலேயே சமீபகாலமாக பெண்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலாகி வருவதால், பெண் பிள்ளைகளை உஷார்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு குறும்படம் தயாராகியுள்ளது. தானும் ஒரு பெண் பிள்ளைக்கு அப்பா என்கிற முறையில் இந்த விழிப்புணர்வு குறும் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

Sharing is caring!