விவசாயிகள் கடனை அடைத்த அமிதாப்பச்சன்

பிக் பி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அமிதாப்பச்சன், கேரளா நிவாரண தொகையாக ரூபாய் 51 லட்சமும், வங்கியில் கடன் வாங்கியுள்ள விவசாயிகளுக்காக ரூ.1.5 கோடியும், நாட்டிற்காக உயிர்  நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு  ரூ.1 கோடியும் வழங்கியுள்ளார்.

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நேற்று மும்பையில்  நடந்த கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சி தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சில வருடங்களுக்கு முன் போலியோ குறித்த விழிப்புணர்ச்சிகளில் நான் பங்கெடுத்துள்ளேன். இப்போது இந்தியாவில், போலியோவே கிடையாது. தற்போது காச நோய் மற்றும் ஹெப்பாடிட்டீஸ்(Hepatitis B)  குறித்து பேசி வருகிறேன். ஏனேனில் எனக்கு Hepatitis B உள்ளது இதை சொல்லுவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

1982 ம் ஆண்டு எனக்கு ஒரு விபத்து நேர்ந்த போது அதிக ரத்தம் தேவைப்பட்டது. அப்போது எனக்கு 200க்கும் மேற்பட்ட நபர்கள் ரத்தம் வழங்கினர். அதில் ஒருவருக்கு ஹெப்பாடிட்டீஸ்(Hepatitis B) இருந்துள்ளது. அது அப்போது யாருக்கும் தெரியாது. 2006-2007 ஆண்டிலோ தான் இது எனக்கு தெரிய வந்தது. அதற்குள் எனது 75% நுரையீரலை அந்த வைரஸ் சாப்பிட்டு விட்டது. மீதமுள்ள 25% தான் நான் உயிர் வாழ்கிறேன்.

தற்போது விவசாயிகள் தற்கொலை தொடர்பான செய்திகளை படிக்கும்போது மிகவும் வேதனை அடைகிறேன். ரூ.15,000, ரூ.20,000, ரூ.30,000 என வாங்கிய கடனை கூட திருப்பி செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை அறிந்து பல ஆண்டுகளுக்கு முன்பே வருந்தினேன். அப்போது 40 முதல் 50 விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவி அளித்தேன். தற்போது வங்கிகளிடம் இருந்து பெயர் பட்டியலை பெற்று 200 விவசாயிகள் வாங்கிய ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கான கடனை செலுத்தி இருக்கிறேன்.

மேலும் உயிர் நீத்த ராணுவ வீரர்கள் 44 பேரின் குடும் பங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளேன். அரசிடம் இருந்து அந்த தியாகிகளின் பெயர் பட்டியலை பெற்று அவர்களது மனைவி மற்றும் தாய், தந்தையர்களுக்கு ரூ.1 கோடியை பகிர்ந்து அளித்து உள்ளேன்.

Sharing is caring!