விஷாலின் அடுத்த படம்

விஷால், நடிப்பில் கடைசியாக திரைக்கு வ‌ந்த  படம் “சண்டக்கோழி 2”.   இதனை அடுத்து, விஷாலின் “அயோக்யா” வெளிவர உள்ளது.  விஷாலின்அடுத்த படத்தை சுந்தர்  சி தயாரிக்கிறார்.  இந்த படத்திற்கான படப்பிடிப்பு துருக்கியில் நடந்து வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்னர், துப்பாக்கி சூடு சம்மந்தமான காட்சி படமாக்கப்பட்டது.

அக்காட்சிக்காக ATV  ரக இருசக்கர வண்டியை விஷால் ஓட்டியுள்ளார்.  அப்பொழுது எதிர்பாராத வகையில் விபத்து நேர்ந்துள்ளது .இந்த விபத்தில் விஷாலுக்கு இடது கை மற்றும் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

 இந்நிலையில்,  மீண்டும் இந்த திரைப்படத்தின் படபிடிப்பை,  துவங்க படக்குழு  முடிவு செய்துள்ளது.  படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானுக்கு  படக்குழு செல்கின்றனர்.  ஏப்ரல் 1 முதல் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தெரிகிறது.

Sharing is caring!