விஷாலின் ‘அயோக்யா’ இன்று ரிலீசாகவில்லை! ரசிகர்கள் அதிர்ச்சி

வெங்கட் மோகன் இயக்கத்தில், விஷால் நடித்துள்ள “அயோக்யா” திரைப்படம் இன்று ரிலீசாகவில்லை. இதனால் விஷால் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், வெங்கட் மோகன் இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் “அயோக்யா”. இப்படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். மேலும், பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், ராதாரவி, ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் தமிழகம் முழுவதும் இன்று(மே10) ரிலீசாக இருந்ததால், விஷால் ரசிகர்கள் காலையிலே தியேட்டருக்கு படையெடுத்தனர். அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது. படம் இன்றைக்கு ரிலீஸ் இல்லை என்று. இதனால் விஷால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.

‘அயோக்யா’ படத்தின் தயாரிப்பாளர், தனது முந்தைய படங்களின் நஷ்டத் தொகை ரூ.3 கோடியை தயாரிப்பாளர் சங்கம் திருப்பி அளித்தால் தான் ‘அயோக்யா’ படம் ரிலீசாகும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் ரிலீஸ் செய்வதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sharing is caring!