விஷால் அனிஷா விரைவில் திருமணம்

அயோக்யா படத்தில் நடித்து வரும் விஷால், ஆந்திராவை சேர்ந்த அனிஷாவைக் காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட நடிகர் விஷால் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

இந்நிலையில், தனது திருமணத் தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

மணமகள் பெயர் அனிஷா ரெட்டி. ஆந்திரா – தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தைச் சேர்ந்தவர். தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் ஆவார்.

இவ்வாண்டு இந்த காதல் திருமணம் நடைபெறும் எனவும் நடிகர் சங்கக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும் அனிஷாவை சென்னையில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் விஷால் கூறியுள்ளார்.

Sharing is caring!