விஷால் படத்தின் படப்பிடிப்பிற்கு போலீசார் தடை விதிப்பு

சென்னை:
நடிகர் விஷால் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை நேற்று போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். என்ன காரணம் தெரியுங்களா?

நடிகர் விஷால் தற்போது தெலுங்கில் சூப்பர்ஹிட் ஆன டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்கிறார்.

ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் நேற்று போலீசார் இந்த படத்தின் படப்பிடிப்பை தடுத்து நிறுத்தியுள்ளனர். விழுப்புரத்தில் உள்ள கூனிமேடு என்கிற இடத்தில் உள்ள ஒரு மசூதி அருகில் ஷூட்டிங் நடத்த அனுமதி வாங்கி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

ஆனால் நேற்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் பாதுகாப்பு கருதி ஷூட்டிங்கை நிறுத்தும்படி போலீசார் கூறியுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!