விஷால் மீது குற்றச்சாட்டு எழுப்பிய ஆர்.கே.சுரேஷ்

சென்னை:
விஷால் சொன்னதை செய்யவில்லை என்று நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் குற்றம் சாட்டி உள்ளார்.

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் இரண்டு முக்கிய சங்கங்களில் பதவியில் உள்ளார். தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீசுக்கு உதவ போவதாக அப்போது கூறினார்.

ஆனால் இப்போது அவர் சொன்ன எதையும் செய்யவில்லை என கூறி நடிகர் ஆர்.கே. சுரேஷ் மற்றும் உதயா ஆகியோர் தயாரிப்பாளர் சங்க பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இதனால் நடிகர் விஷாலுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் சர்கார் படத்துடன் ஆர்.கே.சுரேஷ் நடித்த பில்லா பாண்டி படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!