விஷ்ணுவின் சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்திற்கு ஏக எதிர்பார்ப்பு

சென்னை:
விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விஷ்ணுவிஷாலுடன் இதுவரை உதயநிதி ஸ்டாலின் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் அவர் நடித்த ‘நீர்ப்பறவை’ படத்தை உதயநிதி தன்னுடைய ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலம் ரிலீஸ் செய்து பிரமாண்டமாக புரமோஷன் செய்து வெற்றிப்படமாக்கினார்.

அந்த வகையில் தற்போது மீண்டும் விஷ்ணுவிஷால் படத்தை அவர் ரிலீஸ் செய்யவுள்ளார். அந்த படம் தான் விஷ்ணுவிஷால், ஓவியா நடிப்பில் வரும் 21ம் தேதி வெளிவரவுள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் ஆகும். ஏற்கனவே இந்த படத்தின் புரமோஷன் ஜெட் வேகத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது உதயநிதியும் சேர்ந்து கொண்டதால் இந்த படம் கவனிக்கப்படும் படமாக மாறியுள்ளது.

தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜெயம் ரவி ஆகிய நான்கு முன்னணி நடிகர்களுடன் மோத விஷ்ணுவிஷால், உதயநிதியுடன் கைகோர்த்து தயாராகிவிட்டார் என்பதையே இந்த டீலிங் காட்டுகிறது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வெளிவரும் முதல் ஓவியா படம் என்பதால் இந்த படத்திற்கு ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!