விஷ்ணுவை வைத்து ராட்சசன் என்ற படத்தை இயக்கியுள்ளார் – ராம்குமார்

விஷ்ணு விஷால் நடித்த முண்டாசுப்பட்டி படத்தை இயக்கியவர் ராம்குமார். அதையடுத்து நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் விஷ்ணுவை வைத்து ராட்சசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அமலாபால் நாயகியாக நடித்திருக்கிறார். அக்டோபர் 5-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

இந்தபடம் குறித்து விஷ்ணு கூறுகையில், முண்டாசுப்பட்டி படத்தை காமெடி கதையில் இயக்கிய ராம் குமார், ராட்சசன் படத்தை சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் இயக்கியிருக்கிறார். ஆனால், காமெடி படத்தை இயக்கியவர் இப்படியொரு கதையை அடுத்து இயக்கப்போகிறேன் என்று சொன்னதும் அவருக்கு எந்த ஹீரோவும் கால்சீட் கொடுக்கவில்லை. 15 நடிகர்களிடம் ராட்சசன் கதையை சொன்னார். கடைசியாக மீண்டும் என்னிடமே வந்தார்.

முதலில் நானே இந்த கதையில் நடிக்கிறேன் என்று சொன்னபோது, போலீஸ் கதை உங்களுக்கு செட்டாகாது என்று சொல்லிவிட்டார். இப்போது நான் தான் அதில் நடித்திருக்கிறேன். அதேப்போல் அடுத்த படத்தை வேறு நடிகரை வைத்து தான் இயக்குவேன் என்று சொல்லி வருகிறார் ராம்குமார். இவர் நல்ல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுவார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கு ஸ்டோரி நாலேஜ் அதிகம். ஆனபோதும் இவர் கதை சொல்வது மற்றவர்களுக்கு புரியாது.

நான் அவரது முதல் படத்திலேயே நடித்தவன் என்பதால் அவரைப்பற்றி எனக்கு தெரியும். அதனால் தான் ராட்சசன் படத்தில் துணிந்து நடித்தேன். அதேப்போல் தனது அடுத்த படத்தையும் வேறு நடிகரை வைத்து இயக்கப்போவதாக இப்போது சொல்கிறார்.

Sharing is caring!