விஷ்ணு நடித்த ராட்சசன் படம் செம வசூல் வேட்டை

சென்னை:
நடிகர் விஷ்ணு நடித்த ராட்சசன் படம் சத்தமின்றி வசூல் வேட்டை ஆடியுள்ளது. 2 வாரத்தில் ரூ. 12 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

விஷ்ணு, அமலா பால் நடிப்பில் கடந்த 2 வாரங்களுக்கு முன் திரைக்கு வந்த படம் ராட்சசன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வசூலும் ஆரம்பத்தில் சுமாராக இருந்தாலும், போக போக வேற லெவல் தான்.

தற்போது இப்படம் வெளிவந்து இரண்டு வாரத்தில் ரூ 12 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டதாம். உலகம் முழுவதும் இப்படம் ரூ.18 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.

சிறுபட்ஜெட் படமாக இருந்தாலும், நல்ல படமாக இருந்தால் கண்டிப்பாக மக்கள் ஏற்பார்கள் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!