விஷ்ணு விஷாலின் புதிய படம் ஆரம்பம்

கதாநாயகன் படத்தை தொடர்ந்து ராட்சன், ஜகஜால கில்லாடி, சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். இந்தப் படங்களை தொடர்ந்து புதிதாக ஒரு படத்தில் நடிக்கிறார். இதை அவரே தயாரிக்கவும் செய்கிறார்.

விஷ்ணு ஜோடியாக நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி, முனிஷ்காந்த், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தனது பெற்றோரின் கல்யாண நாளான இன்று(ஜூலை 11) புதிய படத்தை தொடங்கியிருக்கிறார் விஷ்ணு.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்குகிறார். பிரபல பின்னணி பாடகர் கிரிஷ், இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

Sharing is caring!