விஸ்வாசம் டீஸர் பார்த்து பாராட்டி தள்ளிய சென்சார் அதிகாரி

சென்னை:
விஸ்வாசம் டீஸர் பார்த்து பாராட்டி தள்ளியுள்ளார் சென்சார் குழு அதிகாரி.

சிவா-அஜித் கூட்டணியில் 4வது முறையாக தயாராகிறது விஸ்வாசம். கிராமத்து பின்னணியில் திருவிழா போல் படம் அமைய வேண்டும் என்பதை முதலில் உறுதி செய்தே பட வேலைகள் தொடங்கியது.

அதற்கு ஏற்றார் போல் புகைப்படங்கள். டீஸர் பார்க்கும் போது ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது, கலர் கலர் வண்ணங்களாக எல்லாம் அமைந்துள்ளது. இப்பட மோஷன் போஸ்டரை திடீரென்று வெளியிட்ட படக்குழு அடுத்து டீஸர் எப்போது வெளியிடுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் சென்சார் குழுவின் ஒருவரான உமைர் சாந்து டுவிட்டரில், விஸ்வாசம் டீஸர் பார்த்துவிட்டேன் MindBlowing என்று ஒரே வார்த்தையில் கூறி முடித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!