விஸ்வாசம் தியேட்டர்கள் லிஸ்ட்

வருகிற பொங்கல் திருநாளில் ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் என்ற இரண்டு படங்களும் வெளியாவதால் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை கைப்பற்றுவதில் இரண்டு படக்குழுவுக்குமிடையே பலத்த போட்டி நடந்து வந்தது. அதையடுத்து தற்போது ஜனவரி 10ந்தேதி அன்று யார் முதல் காட்சியை போடுவது என்பது குறித்தும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அஜித்தின் விஸ்வாசம் படம் சென்னையில் எந்தெந்த தியேட்டர்களில் வெளியாக உள்ளது என்பது குறித்த ஒரு பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது. சத்யம், எஸ்கேப், தேவி, அண்ணா, ஐநாக்ஸ், ஆல்பர்ட், அபிராமி, சங்கம், பிராட்வே, பிவிஆர், எஸ்-3, கமலா, பிளாசா, உதயம், ஏ.வி.எம்.ராஜேஸ்வரி, ஐடிரீம்ஸ், ஏஜிஎஸ், பாரத், மகாராணி ஆகிய தியேட்டர்களில் விஸ்வாசம் படம் வெளியாகிறது.

Sharing is caring!