விஸ்வாசம் படத்தின் சண்டை காட்சிகள்… திலீப் சுப்புராயன் பெருமிதம்

சென்னை:
விஸ்வாசம் படத்தில் அஜித்தின் பைக் ஸ்டண்ட் மிகவும் பரபரப்பாகவும், அதே நேரம் எமோஷனல் விஷயங்களையும் கொண்டிருக்கும் என்று திலீப் சுப்புராயன் கூறியிருக்கிறார்.

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் செய்துள்ளார்.

இப்படம் குறித்து திலீப் சுப்பராயன் கூறியதாவது:

‘அஜித் சார் மிகவும் கண்ணியமான, எளிமையான நபர். ஒவ்வொரு சண்டைக்கலைஞரையும் அவர் மதிக்கும் விதம் அவர்களுக்கு மிகப்பெரிய வியப்பாக இருந்தது. தொழில் என்று வந்து விட்டால் அவர் ஒருபோதும் குறுக்கிட மாட்டார்.

ட்ரெய்லரில் பார்த்து அனைவரும் பாராட்டும் மழை சண்டைக்காட்சியை பற்றி சிவா எனக்கு விவரித்த போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அஜித் சாரின் பைக் ஸ்டண்ட் பார்வையாளர்களுக்காக மிகவும் பரபரப்பாகவும், அதே நேரம் எமோஷனல் விஷயங்களையும் கொண்டிருக்கும்.

இதை பற்றி மேலும் சொல்ல முடியாது, அதை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் மிகச்சிறந்த அனுபவமாக  இருக்கும்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நடக்கவே சிரமப்படும் தரையில், சண்டை காட்சிகள் படமாக்கப்படும் சூழ்நிலையை நினைத்து பார்க்கவே சவாலாக இருந்தது. ஒட்டுமொத்த குழுவும் உறுதியுடன் இருந்தது, அதை சிறப்பாக நிறைவேற்ற எங்களுக்கு உதவியது” என்றார்.

Sharing is caring!