விஸ்வாசம் படத்தின் தஞ்சை பகுதி உரிமையை கைப்பற்றிய நிறுவனம்

சென்னை:
விஸ்வாசம் படத்தின் தஞ்சை பகுதி உரிமையை சக்தி பிலிம் பேக்டரி வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதன் வியாபாரம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

இப்படத்தின் மொத்த தமிழ்நாடு உரிமையை கேஜேஆர் நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும் திருச்சி, தஞ்சாவூர் பகுதி உரிமைகளை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வாங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் பதிவிட்ட ட்விட்டை படத்தை தயாரிக்கும் சத்ய ஜோதி நிறுவனம் ரீட்விட் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!