‘விஸ்வாசம்’ படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்க போட்டி

விஜய் நடித்த சர்கார் படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸ் 65 கோடிக்கு விற்கப்பட்ட நிலையில், சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘விஸ்வாசம்’ படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்க போட்டி ஏற்பட்டது.

யாருக்கு கிடைக்கப் போகிறது என்று கோலிவுட்டில் உள்ள சினிமா வியாபாரிகள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போட்டியில் ‘அறம்’, ‘குலேபகாவலி’ படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் தான் வெற்றி பெற்றிருக்கிறார்.

அஜித் படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு விஸ்வாசம் படத்தை பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளார் ராஜேஷ். விஸ்வாசம் படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸ் 50 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாம்.

Sharing is caring!