விஸ்வாசம் படம் ஏற்கனவே பொங்கல் வெளியீடு உறுதி

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘பேட்ட’ படம் ‘பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிப்பட்டது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் படம் ஏற்கனவே பொங்கல் வெளியீட்டை உறுதி செய்திருந்தது.

சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன், ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த வாட்ச்மேன், ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள எல்.கே.ஜி. ஆகிய படங்கள் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டன.

இவற்றில் பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களிலும் குழப்பம் நீடிக்கிறது. ஒரு சாரர் பேட்ட பொங்கலுக்கு வராது என்கிறார்கள். ஒரு சாரர் விஸ்வாசம் வராது என்கிறார்கள்.

விஸ்வாசம் பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகி ஜன., 26ல் ரிலீஸாவதாக தகவல் வெளியான நிலையில், லேட்டஸ்ட் நிலவரப்படி, விஸ்வாசம் படத்தை பொங்கலுக்கு சில நாட்கள் முன்னதாக அதாவது ஜனவரி 10 ஆம்தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த இரண்டு படங்களின் இறுதிக்கட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

டிசம்பர் முதல் பேட்ட, விஸ்வாசம் படங்களின் டீஸர், டிரைலர், பாடல்கள் என தொடர்ச்சியாக வெளிவர உள்ளன.

Sharing is caring!