விஸ்வாசம் ரன்னிங் டைம்… திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி

சென்னை:
விஸ்வாசம் படத்தால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எதனால் தெரியுங்களா?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படமும், ரஜினி நடித்துள்ள பேட்ட படமும் வருகிற ஜனவரி 10-ஆம் தேதி ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது. இந்த இரு படங்களுக்கும் திரையரங்குகளை ஒதுக்குவதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

எனினும் இரு படங்களுக்குமே சம அளவிலான திரையரங்குகளை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படத்தின் தணிக்கை சான்றிதழின் படி, படத்தின் நீளம் 2 மணி 32 நிமிடம் என்பது தெரியவந்துள்ளது.

இதன்மூலம் ஒரு நாளில் பல காட்சிகளை திரையிட முடியும் என்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்களாம். அதேநேரத்தில் ரஜினியின் பேட்ட படத்தின் நீளம் (2 மணி 51 நிமிடம்) அதிகம் தான் என்றாலும், அது ரசிகர்களை தொய்வு செய்யாது என்றும் கூறப்படுகிறது. இந்த இரு படங்களின் டிரைலர்களும் சமீழுத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பொங்கல் பண்டிகையில் இந்த இரு படங்களை தவிர்த்து வேறு எந்த படமும் ரிலீசாவது இன்னமும் உறுதியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!