விஸ்வாசம் ……100 நாள் வெற்றி

இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம் ‘விஸ்வாசம்’.  இப்படத்தினை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார்.மேலும் கதநாயகி கதாபாத்திரத்திற்கு  முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நயன்தாராவிற்கு இந்த படத்திலும் நல்ல ரோல் கொடுக்கப்பட்டது.

வழக்கம் போல் தனது கம்பிரமான நடிப்புடன் மிதமிஞ்சிய பாசத்தை வெளிக்காட்டும் தந்தையாக அஜித் விஸ்வாசம் படத்தில் தனது முத்திரையை பதித்துள்ளார். மேலும்  சுவாரஸ்யமாக “கோலமாவு கோகிலா” படத்தில் நயன்தாரவுடன் நடித்த யோகி பாபுவின் 100 வது படமாக இப்படம் அமைந்தது.

இந்நிலையில், இந்த படம் திரைக்கு வந்து 100 நாட்களை கடந்துள்ள நிலையில், இயக்குனர் சிவா இந்த படத்தில் நாயகன் அஜித், நாயகி நயன்தாரா,  மற்றும் படக்குழுவினர்க்கு தனது நன்றிகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Sharing is caring!