விஸ்வாசம் -2… வாய்ப்பு கிடைத்தால் இருக்குமாம்… இயக்குனர் சிவா தகவல்

சென்னை:
இரண்டாம் பாகம்… விஸ்வாசம் இரண்டாம் பாகம் பற்றி இயக்குனர் என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா?

அஜித், சிவா கூட்டணியில் நான்காவதாக வெளியான படம் விஸ்வாசம். விவேகம் படத்தின் விமர்சனத்திற்கு பிறகு ஏன் சிவாவுடன் மீண்டும் இணைகிறார் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது.

ஆனால் அதை விஸ்வாசம் படத்தின் மிகப்பெரிய வெற்றி பதிலளித்துள்ளது. இப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் உணர்வு ரீதியாக சென்றடைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ஆமாம் என்று சிவா பதிலளித்துள்ளார்.

இப்படம் இன்னும் பல கேள்விகளுக்கு உணர்வுப்பூர்வமாக பதிலளிக்கும் வாய்ப்பு இந்த கதையில் உள்ளது. மீண்டும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் இரண்டாம் பாகம் தாராளமாக எடுக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!