வீட்டிலிருந்து வெளியேறும் 3 பேர்

பிக்பாஸ் முதல் சீசனை விட  2 வது சீசன் போரடிப்பதாக ரசிகர்கள் சொல்கிறார்கள். ஆனால் முதல் சீசனைக் காட்டிலும் இப்போது சண்ட்ஐக்கு பஞ்சமே இல்லை. அப்படி படு பயங்கரமாக இருக்கிறது பிக்பாஸ் வீடு. முதல் சீசனில் சண்டைகள் இருந்தாலும் ஆங்காங்கே சந்தோஷமான நிகழ்வுகளும் இருந்தன.

ஆனால் இந்த பிக்பாஸ் சீசனில் ஒரே சண்டைகளாக நடந்து, பார்ப்பவருக்கு எரிச்சலைத் தருகிறது. சனி, ஞாயிறு என்றாலே கமல் வந்து, ஹவுஸ்மேட்ஸின் தவறுகளை சுட்டிக் காட்டுவார். இப்போது வந்துள்ள புதிய ப்ரோமோவில் ஐஸ்வர்யா வழக்கம் போல ஏதோ பிரச்னைக்காக அதிகமாக கத்தி சண்டை போடுகிறார், அப்போது மும்தாஜ் நான் எதுக்கு போகணும் எனக் கேட்டு கோபப்படுகிறார்.

பிக்பாஸ் கதவைத் திறங்க, நான் போகணும் என்கிறார் ஐஸ்வர்யா. 5 நிமிடம் கதவு திறக்கப்படும் வீட்டை விட்டு வெளியேற நினைப்பவர்கள் வெளியே வரலாம் என்று கூறுகிறார் திரையில் தோன்றும் கமல்.

உடனே ஐஸ்வர்யா நான் கிளம்புகிறேன் என கூறுகிறார். அவரைத் தொடர்ந்து பாலாஜி மற்றும் ஜனனியும் ஷோபாவில் இருந்து எழுந்திரிக்கிறார்கள்.

Sharing is caring!