வீட்டில் சண்டை ஆரம்பம்

இன்று கொடுக்கப்படும் கூடுவிட்டு கூடு பாயும் டாஸ்க்கை போட்டியாளர்கள் தீவிரமாக செய்கின்றனர்.

முதல் பிரோமோவில் காட்டியதை போல கூடு விட்டு கூடு  பாயும் டாஸ்க்கின் போது என்ன நடக்கிறது என்பதை தான் இரண்டாவது டாஸ்கிலும் காட்டுகிறார்கள். அதில்,  அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். பொன்னம்பலம் மகத்தாகவும், ஐஸ்வர்யா ஜனனியாகவும், யாஷிகா வைஷ்ணவியாகவும், சென்றாயன் பொன்னம்பலமாகவும், பாலாஜி டேனியாகவும், வைஷ்ணவி பாலாஜியாகவும் இருக்கின்றனர். இந்த போட்டிக்கு ரித்விகா தான் நடுவர் போல, அவர் டாஸ்க் விளையாடுவதற்கான டி-ஷர்ட்டை அணிந்திருக்கவில்லை.


இதில் மகத் (பொன்னம்பலம்) வழக்கம் போல எல்லா பிரச்னைக்கும் வைஷ்ணவி தான் காரணம் என்று கூறுகிறார். அதற்கு வைஷ்ணவி (யாஷிகா) வழக்கம் போல பேச தொடங்குகிறார். உடனே மகத், தலையணையை தூக்கிப்போட்டுவிட்டு செல்கிறார்.சரி… எப்போ சண்டை போடுவாங்க?

Sharing is caring!