வீட்ல பிரச்சினைக்கு யாஷிகா தான் காரணம்…ஷாரிக்

பிக்பாஸ் வீட்டில் நடப்பவைகள் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கும் படி உள்ளது. பொழுது போக்குக்காக பார்க்கும் நிகழ்ச்சி, நம் மனநிலையை பாதிப்பதும் மறுப்பதற்கு இல்லை. மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா மூவரும் தங்களையும் வருத்தி, மற்றவர்களையும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறார்கள்.

குறிப்பாக மஹத் தனது எமோஷனலை கன்ட்ரோல் செய்யாமல், உடனே மற்றவர்கள் மேல் கொட்டி விடுகிறார். இன்னும் முக்கியமாக வெளியில் அவரது காதலி காத்திருக்கும் நிலையில், தனக்கு யாஷிகாவின் மேல் காதல் இருப்பதையும் ஒத்துக் கொண்டார்.

இதனால் மனமுடைந்த மஹத்தின் காதலி பிராச்சி, மஹத்துடனான தனது காதலை முறித்துக் கொள்வதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். இதைப்பற்றி ஒரு இணையதளத்திற்கு பேட்டியளித்த ஷாரிக், ‘எதோ தப்பு நடந்திருக்குதுன்னு நினைக்கிறேன். உள்ள ஃபோன் மத்த பொழுது போக்கு விஷயங்கள் எதுவும் இல்ல. ஸோ அட்ராக்‌ஷன் தான் அது. ரெண்டு பேருக்கும் அவங்களோட காதலர்கள் வெளில இருக்காங்க. அதனால மஹத் வெளில வந்ததுக்கு அப்புறம் எல்லாம் சரியாகிடும். நானும் பிராச்சி கிட்ட பேசி புரிய வச்சிருக்கேன்.

யாஷிகா, மஹத்த ரொம்ப யூஸ் பண்ணிக்கிறான்னு எனக்கு தோணுது. உள்ள இருந்த வரைக்கும் என் கிட்ட தான் எல்லாத்தையும் மஹத் ஷேர் பண்ணுவான். இப்போ நான் இல்ல, ஸோ யாஷிகா பலியாடா மஹத்த யூஸ் பண்ணிக்கிறா, எனக்கு மஹத்த நெனச்சா ரொம்பப் பாவமா இருக்கு’ என்று கூறியிருக்கிறார்.

Sharing is caring!