வெங்கட் பிரவு இயக்கத்தில் மங்காத்தா 2 தயார்!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா படம் கடந்த 2011-ம் ஆண்டில் வெளியாகி வெற்றியடைந்தது. கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக கொண்ட இப்படம் வெளிவந்து 8 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்த நிலையில், நடிகர் அஜித்தை கடந்த மார்ச் மாதத்தில் வெங்கட் பிரபு சந்தித்துள்ளார். இருவரும் சந்தித்த புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்தப் படத்தைப் பார்த்த அஜித் ரசிகர்கள், மங்காத்தா 2 படம் உறுதியாகிவிடும் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் அஜித் சாரும் நானும் வெவ்வேறு திரைப்படங்களில் பிசியாக இருப்பதால் தற்போது மங்காத்தா இரண்டாம் பாகம் எடுக்க வாய்ப்பு இல்லை என்று வெங்கட்பிரபு கூறிவிட்டார். மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் வீண்போகாது, கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனியார் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் வெங்கட் பிரபுவின் சகோதரும், நடிகருமான பிரேம்ஜி, தல அஜித்துடன் நிச்சயமாக ஒருபடம் இருக்கு. ஆனால் அது மங்காத்தா இரண்டாம் பாகமாக இருக்குமா என்பது தெரியவில்லை. எனது அண்ணன் அஜித்துடன் பேசிவருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

Sharing is caring!