வெங்கட கிருஷ்ண ரோகாந்த் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார்

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர், விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார்.

புறம்போக்கு படத்தில் பணியாற்றியபோது, விஜய் சேதுபதிக்கும், ரோகாந்த்துக்கும் அறிமுகம் இருந்தாலும், எஸ்.பி.ஜனநாதனே, விஜய் சேதுபதியை அழைத்து ரோகாந்த்திடம் உங்களுக்கேற்ற கதை ஒன்று இருக்கிறது என கூறி கேட்க வைத்தார். விஜய் சேதுபதிக்கும் கதை பிடித்து போக ஓகே சொல்லிவிட்டார். இப்படத்திற்காக தனது தோற்றத்தையும் விஜய் சேதுபதி மாற்ற உள்ளார்.

மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Sharing is caring!