வெறித்தனம் பண்ணிட்டார் தலைவர்… 2.0 படம் பற்றி கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு மழை

சென்னை:
ரசிகர்களோடு ரசிகனாக 2.0 படம் பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ‘அட கொலை வெறிங்க, வெறித்தனம் பண்ணிட்டார் தலைவர். ஷங்கர் சார் எல்லாம் தெய்வம்ங்க’ என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்,

2.0 படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவந்துள்ளது. திரையிட்ட இடமெல்லாம் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் சென்னையில் ரசிகர்களோடு ரசிகர்களாக கார்த்திக் சுப்புராஜ் 2.0 படத்தை பார்த்து ரசித்தார்.

படத்தை பார்த்து முடித்த பிறகு அவர் படம் குறித்து கூறுகையில் ‘அட கொலை வெறிங்க, வெறித்தனம் பண்ணிட்டார் தலைவர். ஷங்கர் சார் எல்லாம் தெய்வம்ங்க’ என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!