வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி

தனுஷ் நடிக்க வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படம் 2007- ஆம் ஆண்டு வெளியானது. ‘பொல்லாதவன்’ படத்துக்குப் பிறகு 4 வருட இடைவெளிக்குப் பிறகு, 2011ல் ஆடுகளம் படத்தை இயக்கினார். பிறகு, 2016ல் விசாரணை படத்தை இயக்கியவர் இப்போது வட சென்னை படத்தை இயக்கியுள்ளார்.

11 வருடங்களில் 4 படங்களை மட்டுமே இதுவரை இயக்கியுள்ள வெற்றிமாறன் ‘விசாரணை’ படம் தவிர்த்து மற்ற மூன்று படங்களிலும் தனுஷையே இயக்கியுள்ளார். இவற்றில் வட சென்னை இரண்டாம் பாகம் அடுத்தாண்டு துவங்குவதாகவும், அதற்கு முன்னதாக மீண்டும் நாங்கள் வேறொரு படத்தில் இணைகிறோம் என தனுஷ் சமீபத்தில் அறிவித்தார்.

அதன்படி, தனுஷ் – வெற்றிமாறன் இணையும் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

Sharing is caring!