வெளிநாடுகளில் விஸ்வாசம் ரூ.30 கோடி வரை வசூல்?

சென்னை:
வெளிநாடுகளில் விஸ்வாசம் படம் இதுவரை ரூ. 30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஸ்வாசம் படத்திற்கு வெளிநாட்டில் பெரிதும் வரவேற்பு இல்லை என்று ஒரு பேச்சு அடிப்பட்டது.

வெளிநாட்டிலும் விஸ்வாசம் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றதாம். அதிலும் குறிப்பாக இலங்கை, அரபு நாடுகள், மலேசியா, பிரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் பேட்டைக்கு நிகராகவே உள்ளதாம்.

வெளிநாடுகளில் மட்டும் விஸ்வாசம் படம் தற்போது வரை 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!