வெளிவந்த உண்மை!!!!

சமீபத்தில் இசையமைப்பாளராக களமிறங்கி உள்ள சிம்பு, புத்தாண்டையொட்டி, மரண மட்டை என்றொரு ஆல்பத்தை வெளியிட்டார். அந்த பாடலை, இசையமைத்து, எழுதி, பாடியவர், தன்னுடன் நடிகை ஓவியாவையும் பாட வைத்திருந்தார். அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆனது. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா பங்கேற்றபோது அவர் மீதான அன்பை வெளிப்படுத்தியிருந்தார் சிம்பு.

இந்நிலையில் சிம்புவும், ஓவியாவும் மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் நிற்பது போன்ற போட்டோக்கள் இணையதளங்கில் வைரலாகி உள்ளன. இது நம்ம ஆளு படத்தில் நயன்தாராவின் போட்டோவை மார்பிங் செய்து அதில் ஓவியா போட்டோவை இணைத்து சிம்புவுடன் மணக்கோலத்தில் இருப்பது போன்று போட்டோவை யாரோ விஷமிகள் வெளியிட்டுள்ளனர். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் அதிக வைரலாகி, இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாக கூட செய்தி வர, இதைக் கேட்ட சிம்பு, செம கடுப்பில் இருக்கிறாராம்.

Sharing is caring!