வெள்ளித்திரையில் நுழையும் வாணி போஜன்

தொலைக்காட்சித் தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வாணி போஜன், சிக்சர் படத்தில் இணைந்துள்ளார்.

வைபவ் நடிக்கும் சிக்சர் படத்தில் பலாக் லால்வாணி வைபவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார்.

இதில் மற்றொரு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வாணி போஜன் திரையுலகில் நுழைகிறார்.

சஸ்பென்ஸ் திகில் படமாக உருவாகும் இந்த படத்தை நிதின் சத்யா தயாரிக்கிறார்.

படத்தில் இணைந்தது குறித்து வாணி போஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”எனது பழைய நண்பர் நிதின் சத்யா. அவரால் இந்த அறிமுகப் படம் கிடைத்துள்ளது,” என்று பதிவிட்டுள்ளார்.

பூர்ணா, ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தில் வைபவ் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

Sharing is caring!