வெள்ளைப்பூக்கள் போஸ்டரை வெளியிட்ட சூர்யா

நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. இந்தப் படம் அடுத்த மாதம் 19-ம் தேதி வெளிவரவுள்ளது. அமெரிக்காவில் கதை நடைபெறுவதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்தப் படத்தில் விவேக்குடன் இணைந்து சார்லி, பூஜா தேவரியா உட்பட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை விவேக் இளங்கோவன் இயக்கியுள்ளர்.

இந்நிலையில் விவேக் ஹீரோவாக நடித்துள்ள ‘வெள்ளை பூக்கள் படத்தின்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

Sharing is caring!