வேட்டி கட்டு பாடல் செய்யுது அட்டகாச சாதனைகள்

சென்னை:
விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வேட்டி கட்டு வெளியாகி அதிரடி சாதனை செய்து வருகிறது.

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வேட்டி கட்டு வெளிவந்து இணையத்தில் அதிரடியாக பல சாதனைகள் செய்து வருகிறது. வெளிவந்த 10 நிமிடத்தில் 115k லைக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளது. அடிச்சு தூக்கு பாடல் கூட பத்து நிமிடத்தில் இதை விட குறைந்த அளவு (104k) தான் லைக்குகள் பெற்றிருந்தது.

ஒரு மணி நேரத்தில் 2 லட்சம் லைக்குகளை கடந்துள்ளது வேட்டி கட்டு. 51 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது. இமான் இசையமைத்துள்ள இந்த பாடல் மேலும் பல சாதனைகள் செய்யும் என்கிறார்கள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!