வேலைகளை ஒழுங்காக செய்… மனைவிக்கு அட்வைஸ் செய்த தாடி பாலாஜி

சென்னை:
வீட்டில் தலைவர் செய்யவேண்டிய வேலையை ஒழுங்காக செய் இல்லையென்றால் வீணாக சிக்கல் வருகிறது என்று மனைவிக்கு அட்வைஸ் செய்துள்ளார் நடிகர் தாடி பாலாஜி.

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோர் வந்துள்ளனர். பிரிந்த மனைவியுடன் மீண்டும் சேர்வதற்காகத்தான் நான் வீட்டுக்கு வருகிறேன் என முதலிலேயே அவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டின் தலைவியாக உள்ள நித்யா பாலாஜியை பார்த்து பாலாஜி “பொட்டிய தூக்கிட்டு போய்கிட்டே இரு” என கூறினார். எதற்கு தெரியுங்களா?

வீட்டில் தலைவர் செய்யவேண்டிய வேலையை ஒழுங்காக செய் இல்லையென்றால் வீணாக சிக்கல் வருகிறது. இல்லையென்றால் பொட்டியை தூக்கிட்டு போய்டு. நீ இங்கே இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அதனால் தான் இந்த அட்வைஸ் செய்கிறேன் என்று பாலாஜி அட்வைஸ் செய்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!