வைரமுத்து மீது சின்மயி குற்றச்சாட்டு… குவியுது ஆதரவு

சென்னை:
வைரமுத்து மீது பாலியல் சர்ச்சையை கிளப்பி உள்ள சின்மயிக்கு ஆதரவு குரல் அதிகரித்துள்ளது.

இனிமையான தன் குரலால் பல பாடல்களை பாடி ரசிகர்கள் கவர்ந்தவர் பிரபல பாடகி சின்மயி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.

13 வருடங்களுக்கு முன்னால் தனக்கு நடந்ததாக அவர் தற்போது சில விஷயங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவரின் குற்றச்சாட்டை வைரமுத்து மறுத்துள்ளார். அதே வேளையில் சின்மயிக்கு ஆதரவுகள் பெருகி வருகிறது.

#IStandWithChinmayi என்ற ஸ்பெஷல் Tag ஐ பயன்படுத்தி பலரும் கருத்து கூறிவருகிறார்கள். அதை குறிப்பிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சின்மயிக்கான ஆதரவு அதிகரித்து வருவதால் கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பு எழுந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!