வைரலாகும் கௌதம் மேனனின் வீடியோ

இளம் தலைமுறையின் காதல், பாசம், நேசம், வலி முதலானவற்றைப் படமாக்குவர்களில் ஒருவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். தமிழ் சினிமா இயக்குனர்கள் அவரவர் ஸ்டைலை தங்கள் படங்களில் கல்வெட்டுகள் போல் பொறித்தார்கள். ‘இது இன்னாருடைய படம்’ என்று முத்திரை பதித்தார்கள். அந்தவகையில், முத்திரை பதித்த இயக்குனர் பட்டியலில் சற்று வித்யாசமாக , ஸ்டைலீஷாகப் படம் பண்ணும் இயக்குனர் கவுதம் வாசுதேவ்மேனன்.

அந்தவகையில் தன்னுடைய படங்களில் கொஞ்சம் காஃபி – கொஞ்சும் ஆங்கிலம், புத்தகம், கிட்டார், அழகான குடும்பம், அன்பான வார்த்தைகள், அண்ணா நகர் நண்பர்கள், லாஜிக்கான ஹீரோயிசம், உணர்வுபூர்வ உரையாடல் அற்புதமான காதல் உணர்பூர்வமான காமம் இவையனைத்தும் ஓர் படத்தில் கொண்டு வர கௌதம் மேனனால் மட்டுமே முடியும் என்பதை தன் ஒவ்வொரு படங்களின் மூலம் மீண்டும் மீண்டும் நிரூபிப்பார்.

யார் சொன்னது சினிமா சம்மந்தப்பட்ட படிப்பை படித்தால் மட்டுமே இயக்குனர் ஆகமுயுமென்று ஆர்வமிருந்தால் யார்வேண்டுமானாலும் நல்ல அற்புதமான படங்களை கொடுக்கலாம் என்ற சினிமாவின் இயக்கனத்தை உடைத்தெரிந்த பெருமை கெளதம் மேனனையே சேரும். இவரை இன்ஸ்பிரஷனாக வைத்து சினிமா துறையில் நுழைந்த பொறியியல் மாணவர்கள் ஏராளம்.

மாதவனின் “மின்னலே” படத்தில் ஆரம்பித்து “காக்க காக்க”, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’‘, “விண்ணைத் தாண்டி வருவாயா”, “வாரணம் ஆயிரம்”, ‘அச்சம் என்பது மடமையடா’, படங்களை தொடர்ந்து ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’, விக்ரமுடன் ‘துருவநட்சத்திரம்’ என எப்பேர்ப்பட்ட படமாக இருந்தாலும், கவுதம் வாசுதேவ்மேனனுக்கு ஒரு மேக்கிங் ஸ்டைல் உண்டு. அதுதான் அவருக்கான ரசிகப் பட்டாளத்தை, கொஞ்சம்கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

வாக்களிப்பது அவசியம்

இந்நிலையில் சொல்லவரும் தகவலென்னவென்றால் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கெளதம் வாசுதேவ் மேனன். வாக்களிப்பது ஜனநாயக கடமை , ஒவ்வொருத்தரும் வாக்களிக்க வேண்டும் என்று அவர் பதிவு செய்துள்ளார்.

Sharing is caring!