வைரல்…விஜயின் ஸ்டைல்

தமிழில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களுள் விஜய்யின் சர்கார் மிக முக்கியமானது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இதில் விஜய்யுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், வரலக்‌ஷ்மி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். விஜய்யின் பிறந்த நாளன்று வெளியான இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. படத்தின் பாடல்கள் வரும் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் 5 நாட்களுக்கு தினம் ஒரு சர்கார் ஒர்க்கிங் ஸ்டில்ஸ் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து, அதன்படி நேற்று முதல் ஒர்க்கிங் ஸ்டில்லும் வெளியிடப் பட்டிருக்கிறது.

இந்நிலையில் விமான நிலையத்தில் நடந்த படப்பிடிப்பில், விமானத்துக்குள் விஜய் ஏறுவது போன்ற ஒரு ஸ்டில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. கோட், டை, கூலர் என இந்தப் படத்தில் மிகவும் ஸ்டைலிஷாக காட்சியளிக்கிறார் விஜய். இந்தப் படத்தை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப் பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Sharing is caring!