“வைல்டு கார்ட்டில் அனுப்புங்கள்… வைச்சு செய்யறேன்…”

சென்னை:
வைச்சு செய்யறேன்… வைல்டு கார்ட்டில் என்னை உள்ளே அனுப்புங்கள் என்று ஷாரிக் அம்மா உமா ரியாஸ் சொன்னதால் தலையில் அடித்துக் கொண்டார் கமல்.

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா பல முறை “வெச்சு செய்யப்போறேன்” என கூறினார். அவர் எல்லைமீறி நடந்துகொண்டது பிக்பாஸ் ரசிகர்கள் பலருக்கும் கோபம் ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று ஷாரிக் வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் வெளியில் வந்தபோது அவரின் அம்மா உமா ரியாஸ் மேடையில் வந்து பேசினார்.

அப்போது அவர் கமலிடம் “சார்.. என்னை வைல்ட் கார்டு எண்ட்ரியாக வீட்டுக்குள் அனுப்புங்கள்.. வெச்சு செய்யறேன்” என்றார். அதற்கு கமல் தலையில் அடித்துக்கொண்டார். ஐஸ்வர்யா பற்றி தான் அவர் இப்படி மறைமுகமாக சொல்லியிருக்கார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!