ஷங்கரால்தான் முடியும்… 2.0 படம் பற்றி ரஹ்மான் புகழாரம்

சென்னை:
கிராபிக்ஸ் இல்லாமல் இப்படி ஒரு காட்சி எடுக்க முடியும் என்றால் அது ஷங்கரால்தான் முடியும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்து எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிவரும் படம் தான் 2.0. திரைக்கு வந்தால் பல சாதனைகளை படைக்கும் என்று கோலிவுட்டே எதிர்பார்த்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதாம்.

இப்படத்தில் ரஜினியுடன் இந்தி நடிகர் அக்சய்குமாரும் நடிக்கிறார். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இந்நிலையில் இவர் சில தினங்களுக்கு முன் ஒரு பேட்டியில் 2.0 படத்தை பற்றி சில விஷயங்களை கூறியுள்ளார். அதில், ’நான் ஒரு பாடலை பார்த்தேன், CGலாம் இல்லை ஆனால் பிரமித்துவிட்டேன். இது அவரால் மட்டுமே பண்ணமுடியும். முக்கியமாக கிளைமாக்ஸ் சீன் மிகப்பிரமாதம். இதன்மூலம் இந்தியன் என்றாலே ஒரு தனித்துவமாக பார்ப்பார்கள். இதெல்லாம் ஷங்கருக்குதான் போய் சேரும். இவ்வாறு புகழ்ந்து தள்ளி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!