ஷங்கரின் மனம் கவர்ந்த இரண்டு படங்கள்

இயக்குனர் ஷங்கர் தனது படங்களின் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தாலும் அவ்வப்போது சற்று ரிலாக்ஸ் செய்வதற்காக பிறமொழியில் வெளியாகும் சில முக்கியமான படங்களைத் தவறாமல் பார்த்து விடுவது உண்டு. அந்த வகையில் மலையாள சினிமாவை பொறுத்தவரை ஷங்கரின் மனம் கவர்ந்த இரண்டு படங்களை சமீபத்தில் ஒரு பேட்டியில் சிலாகித்து பாராட்டியுள்ளார்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான பிரேமம் மற்றும் கடந்த வருடம் புதுமுகங்கள் நடிப்பில் வெளியான அங்கமாலி டைரீஸ் என்ற இந்த இரண்டு படங்களும், அதன் நேர்த்தியான உருவாக்கத்திற்காக ஷங்கரை ரொம்பவே கவர்ந்து விட்டதாம். ஷங்கர் தங்களது படங்களை குறிப்பிட்டு பாராட்டியது அந்த இளம் இயக்குனர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Sharing is caring!