ஷாரூக்கான் வீட்டின் முன்பு நள்ளிரவில் திரண்ட ரசிகர்கள்

மும்பை:
பிறந்த நாளை ஒட்டி ஷாரூக்கான் வீட்டின் முன்பு ரசிகர்கள் அதிகளவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பிறந்த நாளையொட்டி இரவில் அவரது வீடு முன்பு ரசிகர்கள் குவிந்தனர். பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், தற்போது ஜீரோ உள்ளிட்ட 2 படங்களில் நடித்து வருகிறார். வரும் டிசம்பரில் இரு படங்களும் ரிலீசாக உள்ளன.

தனது 53வது பிறந்த நாளை ஷாரூக்கான் கொண்டாடுகிறார். அவருக்கு பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவே மும்பை மன்னாட் என்ற பகுதியில் உள்ள இல்லத்தின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி ஷாருக்கானுக்கு வாழ்த்து கூறினர்.

வீட்டில் இருந்து வெளியே வந்த ஷாருக்கான் ரசிகர்களை பார்த்து கையசைத்து வாழ்த்து பெற்றார். நள்ளிரவில் ரசிகர்கள் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!