ஷுட்டிங் எடுத்த படம்… சதீஷ் திருமணக் கோலம் படம் வைரல்

சென்னை:
அட இல்லப்பா… அது ஷூட்டிங்கில் எடுத்தது என்று சொல்லி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இயக்குனர் முத்தையா.

பிரபல காமெடி நடிகர் சதீஷ் திருமண கோலத்தில் இருக்கும் ஒரு புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. அதை இயக்குனர் முத்தையா பதிவிட்டிருந்தார்.

அது பற்றி அவரே ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைபவ் மற்றும் சதீஷ் சேர்ந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கின்போது எடுத்தது என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து சதீசுக்கு திருமணம் ஆகி விட்டது என்று வதந்தியே கிளம்பிவிட்டது.

அதை காமெடிக்காக வெளியிட அது வைரலாகியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!