ஷூட்டிங்கின் போது நடந்த சிம்பு – மகேஷ்பாபு சந்திப்பு

சென்னை:
ஷூட்டிங்கின் போது மகேஷ்பாபுவை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் சிம்பு.

சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

அதே இடத்தில் தான் மகேஷ் பாபு படத்தின் ஷுட்டிங்கும் நடக்க, சிம்பு ரோபோ ஷங்கரை அழைத்துக்கொண்டு, மகேஷ் பாபு ஷுட்டிங் நடக்கும் இடத்திற்கே சென்றுள்ளார்.

இதுகுறித்து ரோபோ ஷங்கர் கூறுகையில்,  ‘அருகில் மகேஷ் பாபு சார் படப்பிடிப்பு நடக்கின்றது என கேள்விப்பட்டதும், சிம்பு என்னை அழைத்துக்கொண்டு அங்கு சென்றார்.

என்னிடம் என்ன பேசினார் என்று கேட்டுவிடாதீர்கள், அவருக்கு நம்மை தெரியவாப் போகிறது, சிம்பு சாரிடம் தான் நீண்ட நேரம் பேசினார்’ என ரோபோ ஷங்கர் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!