ஷூட்டிங்கில் அமலா பால் காயம்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்கு பிறகு நடிகை அமலா பால், விஷ்ணு விஷாலுடன் ‘ராட்சசன்’, கே.ஆர்.வினோத்தின் ‘அதோ அந்த பறவை போல’, அறிமுக இயக்குநர் தீபு ராமானுஜம் இயக்கும் பெயரிடப் படாதப் படம், மலையாளத்தில் பிரித்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ மற்றும் இந்தியில் அர்ஜுன் ராம்பால் படம் என படுபிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் ‘அதோ அந்த பறவை போல’ படம் ‘ஜங்கிள் அட்வெஞ்சர் த்ரில்லர் ஜானரில்’ உருவாகிறது.

சென்சுரி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.

Sharing is caring!