“ஸ்கூலில் போட்டோ எடுக்கக்கூடாதுங்க”

ஸ்கூலில் ஃபோட்டோ எடுக்கக்கூடாதுங்க.. ப்ளீஸ் தப்பா நினைச்சுக்காதீங்க என அஜித் பேசும் வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது.

நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் கொண்டாட முதற் காரணமாக சொல்வதே எளிமை. எங்க தல ரொம்ப எளிமை என்பார்கள் அஜித் ரசிகர்கள்.

அதை உறுதிப்படுத்துவதற்காகவே அஜித் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டு அது வைரலாகிக் கொண்டிருக்கிறது.
சில விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், பள்ளி காரிடாரில் அஜித் நடந்து வருகிறார். அவரைப் பார்க்கும் ஊழியர்கள் சிலர் அவருடன் ஃபோட்டோ எடுக்க முற்படுகிறார்கள்.

அப்போது அஜித், “ஸ்கூலில் போட்டோ எடுக்கக்கூடாதுங்க. தப்பா நினைச்சுக்காதீங்க. இன்னொரு நாள் நாம எடுப்போம். நானே சொல்லி அனுப்புறேன். தம்பி அந்த கேமரா மட்டும் ஆஃப் பண்ணுங்க. வள்ளி மேடம் ரெக்வெஸ்ட் பண்ணியிருக்கேன். தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்கெல்லாம் ஸ்டாஃபா.. என்ன பண்றீங்க” எனப் பேசுகிறார்.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வேகமாகப் பகிர்ந்து வருகிறார்கள்

Sharing is caring!