ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் முதல்படம்

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் முதல்படம் – ‘சில்லுன்னு ஒரு காதல்’. சூர்யா, ஜோதிகா நடித்த இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருஷ்ணா. சில்லுன்னு ஒரு காதல் படம் தோல்வியடைந்ததினால் அடுத்தப்பட வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டார்.

அதன் பிறகு சில வருடங்களுக்குப் பிறகு நெடுஞ்சாலை என்ற படத்தை இயக்கினார் கிருஷ்ணா. அந்தப்படமும் சரியாகப் போகவில்லை. எனவே தெலுங்குப் பக்கம் போய் ‘RX100’ என்ற படத்தை இயக்கினார். ‘RX100’ படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது.

அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த கார்த்திகேயாவை வைத்து தமிழ, தெலுக்கு என இரண்டு மொழிகளில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். ‘RX100’ கார்த்திகேயா தமிழில் அறிமுகமாகும் இந்த படத்திற்கு ‘ஹிப்பி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கலைப்புலி எஸ். தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிரார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

Sharing is caring!