ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படம்… வித்யாபாலனுக்கு அதிர்ஷ்டம்

மும்பை:
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஸ்ரீதேவியாக நடிக்கிறார் வித்யாபாலன் என்று தெரிய வந்துள்ளது.

இந்தியில் சூப்பர்ஹிட் ஆன பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யாபாலன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் இந்த படத்தை தயாரிக்கிறார். அவர் தொடர்ந்து இரண்டு படங்களுக்கு அஜித்தின் கால்ஷீட் வாங்கி வைத்துள்ளார். இந்நிலையில் வித்யா பாலன் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இது பற்றி பேசியுள்ள அவர் “ஸ்ரீதேவியாக நடிக்க பெரிய தைரியம் வேண்டும். அவருக்கு பெருமை அளிக்கும் விதமாக நான் நிச்சயம் நடிப்பேன்” என தெரிவித்துள்ளார். போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!