ஸ்ருதிஹாசன் காதலனை பிரிந்தார்…..காரணம் இதுதான்..?

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன், லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்சால் என்பவரை காதலித்து வந்ததார்.

இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும், இந்த காதலுக்கு கமல் மற்றும் சரிகா சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த காதல் பிரிவை சந்தித்துள்ளது.

இதுகுறித்து ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தளத்தில், “மீண்டும் ஒரு புதிய ஆரம்பம். காதல் அனுபவங்களுக்கு நன்றி. இனிமேல் சினிமா, இசை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன். இருப்பினும் ஒரு சிறந்த காதல்” என தத்துவார்த்தமாக பதிவு செய்துள்ளார்.

அத்துடன் முன்னதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த மைக்கேலின் புகைப்படங்களையும் அவர் நீக்கிவிட்டார்.

இதேபோல் மைக்கேல் கோர்சாலே தனது சமூக வலைத்தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார், “வாழ்க்கை உலகின் எதிரெதிர் பக்கங்களில் இருந்து துரதிர்ஷ்டவசமாக நம்மை காப்பாற்றுகிறது. எனவே நாம் தனியாக இருப்பதுபோல் நடக்க வேண்டும். ஆனால் இந்த இளம் பெண் எப்போதும் எனது சிறந்த துணையாக இருப்பார். எப்போதும் ஒரு நண்பராக அவர் எனக்கு இருப்பார் என்று நினைக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.

Sharing is caring!